பக்கங்கள்

Monday, February 28, 2011

பா‌ர்வ‌தியம்மாவின் அஸ்தியை நாசப்படுத்தியமையை கண்டித்து போராட்டம்!ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு! - வைகோ, நெடுமாறன், பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது

செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை‌த் துணை‌த் தூதரக‌த்தை அக‌ற்ற‌க் கோ‌ரி இன்று போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்ட ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்த‌ி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் உ‌ள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
அன்னை பார்வதியம்மாள் சடலத்தை அவ திப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்.
முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும் பார்வதியம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஆவேசமானார்.
அதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன் பேசும்போது,   மனித நேயம் ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சே இது போன்ற கொடூர செயலை செய்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் உதவியால் இது போன்ற இழிவான செயலை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கையை ஆதரித்து காங்கிரஸ் அரசு செய்து வரும் தவறை உணரும் காலம் விரைவில் வரும். இந்த கரையை துடைப்பதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம். இலங்கை தூதரகத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் கொடியை தீவைத்து எரித்தார்கள். பின்னர் அணி அணியாக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இ‌ந்த அ‌ற‌ப்போர‌ா‌ட்ட‌‌ப் பேர‌ணி‌யி‌ல் ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்ள த‌மி‌ழ் உண‌ர்வாள‌ர்க‌ள் ஏராளமானோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.
செ‌ன்னை ஆ‌ழ்வா‌ர்‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை துணை தூதரக‌த்தை பேர‌ணி நெரு‌ங்குவ‌‌ற்கு மு‌ன்பு அவ‌ர்க‌ள் அனைவரையு‌ம் பொலிஸார் கைது செ‌ய்தன‌ர்.
வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன், மற்றும் புதிய பார்வை நடராஜன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தி மு க அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் நடிகர் விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தில் திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
2ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகிறது.எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக  இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.   
சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.
 தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
  
மேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.
 தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் கூறியுள்ளார்.

Saturday, February 26, 2011

விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி!

விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது.

இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். அப்போது இதுபற்றி அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொகுதிகளில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு போன்றவை குறித்து கருத்து கேட்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த பற்றிய விவரங்களை அவர் சேகரித்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் கண்டுள்ளன. அவற்றை அ.தி.மு.க.விடம் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது.

இலங்கைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: நெடுமாறன் அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள இராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.
மனிதநேயமும் நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெப்ரவரி 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.
மயிலை லஸ் சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக சிங்கள துணைத் தூதரக அலுவகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி -சங்கதி 

காங்கிரஸின் கோபமும் திமுகவின் தயக்கமும்!

காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை திமுக ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பது அதன் தலைவர்களிடம் பேசும்போது தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஆ. ராசாவின் கைது, சிபிஐ விசாரணை என்று உச்ச நீதிமன்றம் முடுக்கி விட்டிருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து வெளிவருவது திமுகவுக்கு பாதகமாகப் போகக்கூடும் என்கிற நிலையில், காங்கிரûஸப் பகைத்துக் கொள்ளத் திமுக தலைமை தயாராக இல்லை.
காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை திமுக ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பது அதன் தலைவர்களிடம் பேசும்போது தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஆ. ராசாவின் கைது, சிபிஐ விசாரணை என்று உச்ச நீதிமன்றம் முடுக்கி விட்டிருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து வெளிவருவது திமுகவுக்கு பாதகமாகப் போகக்கூடும் என்கிற நிலையில், காங்கிரûஸப் பகைத்துக் கொள்ளத் திமுக தலைமை தயாராக இல்லை.

""ஆரம்பத்தில், "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு அமைச்சர் ஆ. ராசா மட்டுமே பொறுப்பாக இருக்க முடியாது என்றும், இவ்வளவு பெரிய ஊழலைத் தனிமனிதராக ஒருவர் செய்திருக்க முடியாது என்றும் பேசிவந்த முதல்வர் கருணாநிதி, இப்போதெல்லாம் அந்தப் பிரச்னை பற்றிப் பேசுவதையே நிறுத்தி விட்டிருப்பதிலிருந்து, எந்த அளவுக்கு திமுக தலைமை சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்'' என்கிறார் ஒரு மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர்.

தில்லியில் காங்கிரஸ் தலைமையுடன் முதல்வர் நடத்திய சந்திப்பிலேயே கூட்டணி ஆட்சி பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

""மத்திய ஆட்சியில் பங்கு பெற்ற நீங்கள் ஏன் மாநில ஆட்சியிலும் பங்கு தரக்கூடாது?'' என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தேர்தலுக்குப் பிறகு நாம் கூட்டணி ஆட்சி அமைத்துக் கொள்ளலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இப்போதே கூட்டணி ஆட்சி என்று அறிவிக்க வேண்டாம்'' என்று முதல்வர் கேட்டுக்கொண்டதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் இந்த ஒப்புதலின் அடிப்படையில்தான் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்க முற்பட்டிருக்கிறது. 1984-ல் போட்டியிட்டதுபோல 73 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பு. இல்லையென்றால், குறைந்தபட்சம் 1991, 1996 தேர்தல்களில் போட்டியிட்டதுபோல 65 அல்லது 64 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அப்படி போட்டியிடுவதன் மூலம் எப்படியும் திமுகவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ள முடியும் என்பதுதான் காங்கிரஸின் எண்ணம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

திமுகவின் மனநிலையே வேறாக இருக்கிறது. கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது இரண்டு இடதுசாரிக் கட்சிகள்தான். அவர்கள் போட்டியிட்ட 23 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பத்து இடங்களையாவது ஒதுக்கித் தந்தாக வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கை 13 என்று சொன்னால் 10 இடங்களையும், 10 என்று சொன்னால் 13 இடங்களையும் திமுகவும், காங்கிரஸýம் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் திமுகவின் விருப்பம்.

""அவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதைவிட, திமுக குறைந்த இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் குறிக்கோளாக இருக்கும் போலிருக்கிறது. காங்கிரஸார் இன்னும் 1977, 1989-களில் மிதக்கிறார்கள். தனியாக நின்றால் இன்றைக்குக் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றிபெறுவதுகூட சிரமம் என்று அவர்களுக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்'' என்று மூத்த திமுக அமைச்சர் நக்கலாகவும் கேலியாகவும் திருவண்ணாமலையில் நடந்த அமைச்சர் ஏ.வ. வேலு இல்லத் திருமணத்தில் கமெண்ட் அடித்ததாகத் தெரிகிறது.

இதைப்பற்றிக் கேள்விப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், "திமுக மட்டும் பழைய பலத்துடன் இருக்கிறதா என்ன?' என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

பரவலாகவே திமுகவினர் மத்தியில் காங்கிரஸ் மீது சந்தேகமும், தங்களை "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள் என்கிற கோபமும் நிறையவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த சிபிஐ விசாரணை பலரையும் மனதுக்குள் குமுற வைத்திருக்கிறது.

""மதிமுக பிரிந்தபோதுகூட, அதைச் சாக்கிட்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவாலயத்தை எதுவும் செய்யத் துணியவில்லை. இப்போது, திமுகவைக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட மத்திய அரசு அறிவாலயத்துக்குள் சிபிஐயை அனுப்புகிறது என்றால், பிறகு அது என்ன கூட்டணி?'' என்று குமுறுகிறார்கள் திமுகவினர்.

2009-ல் மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, திட்டமிட்டு திமுகவின்மீது சேறு வாரிப் பூசப்படுகிறது என்பது திமுகவின் வாதம். அமைச்சரவை அமைப்பதில் திமுகவை வில்லனாகச் சித்திரித்தது, வேண்டுமென்றே ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்களில் திமுகவையும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகளைப் பரப்பியது, இலாகாக்கள் ஒதுக்குவதில் தேவையில்லாமல் சிக்கல்களை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு திமுகவைப் பலவீனப்படுத்தி வருகிறது என்று குமுறுகிறார்கள் அண்ணா காலத்திய திமுக மூத்த தலைவர்கள்.

""காங்கிரஸ் "மிசா'வின்போது நடத்திய தாக்குதலையும், சர்க்காரியா கமிஷன் அமைத்து எங்களை அவமானப்படுத்தியதையும், 1990-ல் எங்களது ஆட்சியைக் கலைத்ததையும், ராஜீவ் மரணத்துக்கு எங்களைக் காரணமாக்கியதையும் நாங்கள் மறந்துவிட முடியுமா என்ன? இப்போதும் பாருங்கள், கூட்டணிக் கட்சி என்றுகூடப் பார்க்காமல் "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் எங்களை மட்டும் குற்றவாளிகளாக்கித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்'' என்று கொதித்துவிட்டார் திமுகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து இப்போது ஓரங்கட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

""கூட்டணி ஆட்சி என்கிற காங்கிரஸின் கோரிக்கை தற்கொலைக்குச் சமம். தமிழக மக்கள் மத்தியில் கூட்டாட்சியை ஏற்றுக்கொள்வதுபோல, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பதைப் பற்றி நாம் யோசித்துக் கொள்ளலாம். இப்போது, கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்து, வெற்றி பெறுவதுதான் முக்கியம்'' என்று முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது.

""கூட்டணி ஆட்சி என்று நாம் அறிவித்ததுதான் திமுக - காங்கிரஸ் கூட்டணி 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குக் காரணம்'' என்று முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டுவதைக் காங்கிரஸார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

""அன்றைய சூழ்நிலை வேறு, இன்றைய சூழ்நிலை வேறு. 1980-ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்த கோபம் மக்களுக்கு இருந்தது. அதுதான் தேர்தல் முடிவுகளை நிர்ணயித்ததே தவிர, கூட்டணி ஆட்சி அல்ல பிரச்னையாக இருந்த விஷயம்'' என்கிறார்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.

""காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை அதிமுகமீது இருப்பது கோபம், திமுகமீது இருப்பது வெறுப்பு!'' என்று பளிச்சென்று போட்டு உடைத்தார் ஒரு முன்னாள் ஜனதாக் கட்சித் தலைவர். ""ஜெயலலிதா ""ராஜீவ் சிந்திய ரத்தத்தால் நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை'' என்று 1992-ல் கூறியதும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைப் பற்றி அவர் கூறிய கருத்துகளும் காங்கிரஸ் தொண்டர்களைக் கோபப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், அது கோபம்தானே தவிர, வெறுப்பல்ல. ஆனால், திமுகவினர்மீதும், கருணாநிதிமீதும் காங்கிரஸாருக்கு இருப்பது வெறுப்பு. கோபம் மாறும். ஆனால், வெறுப்பு மாறவே மாறாது'' என்றார் அவர்.

காங்கிரûஸ ஆட்சியை விட்டு அகற்றிய கட்சி திமுக என்பதால் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு எப்போதுமே உதயசூரியன் சின்னத்தின்மீது வெறுப்பு இருப்பது ஊரறிந்த உண்மை. பெருந்தலைவர் காமராஜைத் தமிழன் என்றும் பாராமல் திமுக கைவிட்டது என்கிற ஆதங்கம் காங்கிரஸாருக்கு நிறையவே உண்டு. அதேபோல, இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றித் தரக்குறைவாகத் திமுகவினர் விமர்சித்ததும், மதுரையில் அவரைத் தாக்க முற்பட்டதும், ராஜீவ் காந்தியின் கொலையாளிகளுக்குத் திமுக அரசு உதவியது என்கிற கருத்தும், காங்கிரஸார் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை.

பரஸ்பரம் திமுகவினருக்குக் காங்கிரஸ்மீதும், காங்கிரஸ்காரர்களுக்குத் திமுகவினர் மீதும் இருக்கும் வெறுப்பு, தமிழகத் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக்கூடும் என்கிற பயம் திமுக தலைமையை அலட்டத் தொடங்கி இருக்கிறது. அதிக இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதேகூடத் தேர்தலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்கிறார் ஒரு மூத்த திமுக தலைவர்.

""காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறக் கூடாது என்று திமுக தொண்டரும், திமுக கூடுதல் இடங்களைப் பெற்றுவிடக்கூடாது என்று காங்கிரஸாரும் கருத்தில் கொண்டு செயல்படக் கூடும். திமுக தலைமையின் கட்டுப்பாட்டை மீறி எங்கள் தொண்டர்கள் செயல்பட மாட்டார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் நாங்கள் முழுமனதுடன் வாக்களிப்போம். ஆனால், காங்கிரஸ் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, காங்கிரஸ் வாக்காளர்கள். அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸýக்கும், திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் அதிமுக அணிக்கும் வாக்களித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை'', என்றார் அவர்.

கூட்டணி ஆட்சி என்கிற சந்தேகம் ஏற்பட்டாலே அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று பயப்படுகிறது திமுக தலைமை. மேலும், அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவது, திமுக தொண்டர்களை உற்சாகமிழக்க வைத்துவிடும் என்றும், இரண்டு கட்சித் தொண்டர்களும் முழுமனதுடன் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் திமுக தலைமையின் கருத்து.

""கடந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே 129 இடங்களில்தான். அதில் 96 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. இதைவிடக் குறைவான இடங்களில் திமுக எப்படி போட்டியிட முடியும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிடக் கூடுதலாக 5 இடங்களைத் தரத் தயாராக இருக்கிறோம். இடதுசாரிகள் இல்லாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லாமல் போனால் கூட்டணி பலவீனமாகிவிடும் என்பதுகூட தங்களுக்குப் புரியாமல் போனால் எப்படி?'' என்று தங்களது இயலாமையைக் காங்கிரஸின் ஐவர் குழுவுக்குத் திமுக குழு தெரிவித்ததாகக் கூறுகிறார்கள்.

தேமுதிகவும் சேர்ந்துவிட்ட நிலையில் கடந்த தேர்தலைவிட அதிமுக அணி மேலும் பலமடைந்திருக்கிறது. இடதுசாரிகள் இல்லாத நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்தாலுமேகூட, திமுக கூட்டணி, பழைய பலத்துடன்தான் தொடர்கிறதே தவிர, அதன் கூட்டணி பலம் அதிகரிக்கவில்லை. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இழப்பது திமுக அணியை மேலும் பலவீனப்படுத்தும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்தால், காங்கிரஸýக்கு அதிகபட்சம் 53 முதல் 57 இடங்களைத்தான் தர முடியும். காங்கிரஸ் கேட்கும் 65 இடங்களைத் தந்தால், திமுகவின் நிலைதான் என்ன? என்பது திமுக தரப்பின் நியாயமான கேள்வி.

காங்கிரஸின் கோபத்துக்கும் காரணம் இருக்கிறது... திமுகவின் தயக்கத்துக்கும் காரணமிருக்கிறது

நன்றி தினமணி

Friday, February 25, 2011

+++ நெருக்கடியில் இருக்கிறதா சி.பி.ஐ.?

டந்த 2009, அக்டோபர் 21-ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக
சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் சென்ற பிறகே சோம்பல் முறித்து, நடவடிக்கையில் இறங்கியது!


டந்த 2009, அக்டோபர் 21-ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக
சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் சென்ற பிறகே சோம்பல் முறித்து, நடவடிக்கையில் இறங்கியது!

 அப்போது சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அஸ்வனி குமார், பதவியில் இருந்து விலகும் நேரத்தில், இந்த வழக்கு விவகாரம் முழுவதையும் பிரதமருக்குத் தெரிவித்துவிட்டு, 'அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும்’ என்பதையும் தெளிவாகக் கூறிவிட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு சி.பி.ஐ. இயக்குநராக வந்தவர், அமர்பிரதாப் சிங். இவர் வந்த பிறகுதான் வழக்கு வேகமெடுத்தது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் செயலாளர் சித்தார்த் பரூவா, தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோர் கைதாகினர்.
2ஜி அலைக்கற்றையில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது பற்றி, மத்திய தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்கிறது. சி.பி.ஐ. 20 ஆயிரம் கோடி என்கிறது. புதிதாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்​பேற்ற கபில் சிபலோ 'இழப்பே இல்லை’ என்கிறார்! இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அலசி ஆராய்ந்துவரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு, '2ஜி மற்றும் 3ஜி விவகாரத்தில் தற்போதைய நிலை பற்றி நேரில் வந்து தெரிவிக்கும்படி’ சி.பி.ஐ. இயக்குநர் அமர் பிரதாப் சிங்குக்கு அழைப்பு விடுக்க... கடந்த 15-ம் தேதி மாலை 3 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் தளத்தில் நடந்த கூட்டத்துக்கு அமர்பிரதாப் சிங் ஆஜரானார். நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக பி.ஜே.பி. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளார். இந்தக் குழுவில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தமிழகத்தைச் சேர்ந்த தம்பிதுரை, திருவண்ணாமலை வேணுகோபால், ராஜ்யசபா எம்.பி-க்கள் திருச்சி சிவா, பாலகங்கா உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள்!
இந்தக் குழு முன்னிலையில் ஆஜரான சி.பி.ஐ. இயக்குநர் சில விஷயங்களை விரிவாகவே சொன்னாராம். ''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 67 ஆயிரம் கோடி முதல் 1.76 லட்சம் கோடி வரை இழப்பு இருக்கலாம் என்று மத்திய தணிக்கை குழு கூறுகிறது. ஆனால் சி.பி.ஐ-யும், அமலாக்கப் பிரிவு இயக்குநரகமும் இணைந்து மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வில் 22 ஆயிரம் கோடி அளவு இழப்பு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீட்டின் அளவு 40 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கலாம். எவ்வளவு இழப்பு என்கிற விஷயத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்துகிறது. சிக்கலான தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் என்பதால், இந்த நேரத்தில் எவ்வளவு இழப்பு என்று மிகச்சரியாகக் கூறமுடியவில்லை. மேலும் சி.பி.ஐ., 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மோசடி தொடர்பான கிரிமினல் சதிகளைப் பற்றி மட்டுமே விசாரித்து வருகிறது...'' என்று சொன்னாராம்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இழப்பே இல்லை என்று கூறியது பற்றி பொதுக் கணக்குக் குழுவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு ஏ.பி.சிங், ''இழப்பே இல்லை என்று கூறுவது தவறு! 2ஜி முறை​கேட்டால் அரசு கஜானாவுக்கு பணம் வராமல் போய்விட்டதுதான் உண்மை!'' என்றும் உறுதியாகக் கூறி இருக்கிறார்.
அப்போது குறுக்கிட்ட ஐக்கிய ஜனதாதள எம்.பி-யும், கணக்குக் குழு உறுப்பினருமான என்.கே.சிங் மற்றும் உறுப்பினர்கள், ''இழப்பே இல்லை என்பதில் சி.பி.ஐ-க்கு மாற்று கருத்து உள்ளது. பின்னர் ஏன் முன்னரே நடவடிக்கை எடுக்கவில்லை?'' என்று கேட்டுள்ளனர். அதற்கு சி.பி.ஐ. இயக்குநர், ''மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய புலன்விசாரணையை முடிக்கும் வரை காத்திருந்தோம்...'' என்று கூறி இருக்கிறார். ஆனால், இந்த பதிலால் கணக்குக் குழுவினர் திருப்தி அடையவில்லையாம்.
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்​வந்த் சின்ஹா, ''2010 செப்டம்​பரில் கோர்ட் தலையிடும் வரை பெயர் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து வைத்திருந்தது ஏன்? இந்த வழக்கில் சந்தேகத்துக்கு உரியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று சி.பி.ஐ-க்கு ஏதேனும் நெருக்கடிகள் வருகிறதா?'' என்று கேட்டுள்ளார். ''அப்படி எதுவும் இல்லை!'' என்று சி.பி.ஐ. இயக்குநர் மறுத்து, ''ஆ.ராசா, உயர் அதிகாரிகள் மற்றும் பால்வா ஆகியோர் இதுவரை கைதாகி இருக்கிறார்கள். மேலும், குறைந்த விலைக்கு அலைக்கற்றை வழங்கப்பட்டது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே, விசாரணை முடிக்க சிறிது காலம் தேவைப்படுகிறது...'' என்றும் கூறியுள்ளார்.
இது தவிர மற்ற உறுப்பினர்களிடம் இருந்து சரமாரியான கேள்விகள் வந்துள்ளன. அதற்கு அவர், ''இந்தப் பொறுப்புக்கு நான் புதியவன். இங்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகிறது!'' என்று கூறியிருக்கிறார். இதனால் கூட்டத்தை அத்துடன் நிறுத்திவிட்டு, 'மேலும் தகவல்களுடன் மீண்டும் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பு விசாரணைக்கு வரும்படி’ ஜோஷி கூறியதாகச் செய்திகள் கசிகின்றன.
தற்போதைய சி.பி.ஐ. இயக்குநரான அமர்பிரதாப் சிங், 1974 பேட்ஜை சேர்ந்த ஜார்க்கண்ட் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் இதற்கு முன் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராகவும், எல்லைப் பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இந்தியன் போலீஸ் மெடல், குடியரசுத் தலைவரின் போலீஸ் மெடல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவரே எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், மீண்டும் வருவதாகக் கூறிச்சென்றது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது!
- பா.பிரவீன்குமார்

பிரதமர் சொன்னது சரிதானா?
''கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்​கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் என் கையில் இல்லை...'' - மடை திறந்தது போல் மனசை கொட்டியிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
சோ: ''கூட்டணி அரசில் லஞ்சம், ஊழல் இருக்கிறது. அதை பிரதமரால் கட்டுப்​படுத்த முடியாது என்பது போல ஒரு தத்துவத்தை உதிர்த்திருக்கிறார். மத்திய அரசுக்கு இதைவிட கேவலம் இருக்க முடியாது. பீகாரில்கூட நிதிஷ் தலைமையில் கூட்டணி அரசுதான் நடக்கிறது... அங்கே என்ன ஊழலா நடக்கிறது?''
தமிழருவி மணியன்: ''இப்படி​​யரு மோசமான வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. நேர்மையைத் தானாக இழந்து பதவியை தக்கவைத்துக் கொள்ள வாக்குமூலம் கொடுத்​திருக்கிறார் பிரதமர். பதவியைக் காப்பாற்றிக் கொள்​ளவும், ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காகவும் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கொள்ளைப் போ​னா​லும் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லுவது எந்த வகை நியாயம்? 
கோபண்ணா (காங்கிரஸ்): ''கூட்டணிக் கட்சிகளில் இருந்து யார் அமைச்சர் ஆக வேண்டும் என்பதை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்தான் முடிவு செய்ய முடியும். தி.மு.க-வில் அமைச்​சர்களாக யார் இருக்க முடியும் என்பதை கலைஞர்தான் தீர்மானிக்க முடியும், பிரதமர் அல்ல. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது கூட்டணியில் இருந்த ஜெயலலிதா சிபாரிசு செய்தவர்கள்தான் அமைச்சர்கள் ஆனார்கள். புதுசாக எதுவும் நடந்துவிடவில்லை. கடந்தகால நடைமுறைகள்தான் இப்போதும் கடைபிடிக்கப்​பட்டிருக்கிறது.''
- எம்.பரக்கத் அலி

கோபத்தில் காங்கிரஸ் ...தயக்கத்தில் தி மு க ...

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும், வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும், வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் பத்திரிகைத் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மட்டும்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் பேச்சுவார்த்தைக்கு வந்தது முதலாவது அதிர்ச்சியாக இருந்தது.

பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ப. சிதம்பரம் தனது கையில் பேசவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புடன் வந்திருந்தது திமுக அணி சார்பில் வந்திருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரை முருகன், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி.

பேச்சுவார்த்தைக்குப் புறப்படுவதற்கு முன்பே சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது ஐவர் குழு. பெருவாரியான தொண்டர்களின் மனோநிலை இந்த முறை கூட்டணி ஆட்சிக்கான உத்தரவாதம் இல்லாமல் காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கக்கூடாது என்பதுதான்.

""நாங்கள் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறோம். அன்னை சோனியா காந்தியே "எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்று தன்னிடம் கூறியதாகக் கூறிய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸூடனான கூட்டணியை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதானே பாமக-வைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும்?'' என்பது காங்கிரஸ் தரப்பில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

""31 இடங்களை ஒதுக்குவது என்றால், அது ஏறத்தாழ 12% வாக்குகளுக்குச் சமம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவ்வளவு வாக்குகள் இருக்கிறதா?'' என்பது இன்னொரு தொண்டரின் ஆவேசக் கேள்வி. இந்த மனக்குறைகளை உள்ளடக்கிய நிலையில்தான் ஐவர் குழு, திமுக தரப்பை சந்தித்துத் தனது கோரிக்கைகளைப் பட்டியலிட்டது.

234 தொகுதிகளில் திமுக குறைந்தது 140 தொகுதிகளிலாவது போட்டியிடுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மீதமுள்ள 94 இடங்களில் பாமகவுக்கு 31 இடங்களையும் ஒதுக்கிவிட்ட நிலையில், இருப்பது வெறும் 63 இடங்கள்தான். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 9 இடங்களைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்கும் 15 இடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தது 10 இடங்களை ஒதுக்கினாலும் மீதமிருப்பது 53 இடங்கள் மட்டுமே. கடந்தமுறை 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலாக 5 இடங்களை அளித்து 53 இடங்களில் போட்டியிடச் செய்வதுதான் திமுகவின் திட்டம் என்று, திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகள் என்பது 5 மக்களவைத் தொகுதிக்குச் சமம். கடந்த மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் பார்த்தால், 15 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸூக்கு 90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி, ""ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 இடங்கள் என்று பெற்றுக்கொண்டாலும், காங்கிரஸூக்கு 78 இடங்கள் தரப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்?''

கடந்த தேர்தலில் இருந்த நிலையில் திமுக இப்போது இல்லை. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆளும்கட்சியின் ஒரே கவசம் காங்கிரஸ் மட்டும்தான். ""இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், நாங்கள் கூட்டணிக் கட்சி என்பதால் "கை' கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல இடங்களையும் திமுக தரத்தானே வேண்டும்?'' என்கிற காங்கிரஸின் கோரிக்கை திமுக தலைமையை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்?

""ஒவ்வொரு முறையும் ஆட்சியைக் கைப்பற்றவும், குறைந்தபட்சம் ஆட்சியில் பங்கு பெற்று அதன் மூலம் கட்சியைத் தமிழகத்தில் மீண்டும் பலப்படுத்தவும் கிடைத்த வாய்ப்புகளை, எங்கள் தலைமை நழுவவிட்டு விட்டது. இந்த முறையும் எங்களது முதுகில் ஏறி அவர்கள் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துவிட்டு, எங்களைத் தோளில் சவாரி செய்கிறோம் என்று நையாண்டி பேச விடுவதாக இல்லை'' என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. தாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவதும், திமுக முன்பைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிடுவதும்தான் கூட்டணி ஆட்சிக்கு வழிகோலும் என்கிற காங்கிரஸின் கணக்கு, திமுகவிடம் வைத்திருக்கும் கோரிக்கையில் தெரிகிறது.

""வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அறிவிப்பு. மூன்றில் ஒரு பங்கு, அதாவது 78 இடங்கள். வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்தால் அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள். குறைந்தபட்ச செயல்திட்டம். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு என்று பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் திமுகவுக்கு விதிப்பதாகவும், இதைக் கேட்டு திமுக தரப்பு விதிர்விதிர்த்துப்போய் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

முதல்வர் கருணாநிதி தில்லி சென்று, சோனியா காந்தியைச் சந்திக்கச் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதுதான் வெளியில் வந்த செய்தி. கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த ராகுல் காந்தியும் தங்களது சந்திப்பின்போது இருக்க வேண்டும் என்று சோனியா விரும்பியதுதான் இந்தக் காத்திருப்புக்குக் காரணம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும், காங்கிரஸின் கோரிக்கைகள் அனைத்துமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன்தான் வைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

""திமுக தரப்பு எங்களது கோரிக்கையை நிராகரிப்பதால் நஷ்டம் திமுகவுக்குத்தான். எங்களுக்கு இப்போதும் பதவி இல்லை. தனியாகப் போட்டியிட்டாலும் பதவி இல்லை, அவ்வளவுதானே. 1977-ல் நாங்கள் தனித்துப் போட்டியிட்டபோது 27 இடங்களிலும், 1989-ல் தனித்துப் போட்டியிட்டபோது 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். 2001-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தமாகாவும் காங்கிரஸூமாக 30 இடங்களிலும், 2006-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது 34 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த முறை மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டாலும் ஏறத்தாழ அதே இடங்களில் வெற்றிபெற முடியும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர்.

ஒருவேளை திமுக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் தயங்காது என்று தில்லியிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளும் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமானால், அதிமுகவுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் தேமுதிகவேகூட அந்த அணிக்கு வரக்கூடும். ஏன், அதிமுகவே, காங்கிரஸூடன் கூட்டணி ஆட்சிக்குப் பச்சைக்கொடி காட்டக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.

""காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் சரி, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சரி, பரஸ்பரம் இருக்கும் நட்புறவும் தோழமையும், திமுகவுக்கும் காங்கிரஸூக்கும் கிடையாது. தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் வேண்டாவெறுப்பாகத் கைகோத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனத்தளவில் தொண்டர்கள் அதிமுக - காங்கிரஸ் உறவைத்தான் விரும்புகிறார்கள்'' என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகள் "மைனாரிட்டி' ஆட்சி நடத்திய திமுக, காங்கிரஸூக்கு அதிக இடங்களைத் தராமல் இருக்க "சதி' செய்கிறது என்கிற குமுறலும் கோபமும் காங்கிரஸôர் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் பல பிரச்னைகளில் கோபமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக வகுக்கும் வியூகம்தான் என்ன?

நன்றி தினமணி
அன்புள்ள தலைவரே…..
நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…

நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ?
 a_raja_20110221
சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… ? நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…

முதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெரும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… ? அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள்.

நான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…

அதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன்.

ஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று.

அந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… ? நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…
 a-raja5_20110202
இதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே…   ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..

இந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து வளர்த்தார்கள். இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…
பெரம்பலூரில், அந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை.   போற்றவும் இல்லை.

ஆனால் இன்று …. …. ….. ….
 rajacourt_20110210
ஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை.   எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… ?

நான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. ? அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன்.   என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே ?.

என்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… ?

ஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….
 a_raja_arrest_20110214
நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…

பதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் என்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.

அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….

நான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..
 protest3_20101213
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே….

இந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..

உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.

“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”

சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..
 karunanidhi_a_raja_20110307
ஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு

ஆண்டிமுத்து ராசா.
spectrum_pudavai

"ஸ்பெக்ட்ரம் புடவை" என்ற புதிய டிசைன் புடவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.   இந்தப் புடவை சிஐடி காலனியில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.  புடவை வேண்டுபவர்கள், மொத்த கொள்முதல் புடவை வியாபாரியை அணுகவும்

Wednesday, February 23, 2011


பிப்ரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியு இந்தியன் எச்ப்ரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றியாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றிய செய்தி அது.  ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது. தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.
பிப்ரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியு இந்தியன் எச்ப்ரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றியாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றிய செய்தி அது.  ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது. தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.

ஆனால் அதற்குப்பிறகு, ஈழ மீனவர்களை வைத்து இந்திய தூதரக வாயிலில் போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் செய்பவர்கள் என்று புரிய வேண்டிவந்தது. இதற்காகவே அங்கு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தா செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.அப்படியானால் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் உள்ள வேருபாடுகளை பயன்படுத்தி டக்லஸ் நுழைந்துவிட்டார் என்றும், அதுவே அவர் ராஜபக்சேவிற்கு செய்யும் விசுவாச வேலை என்றுமட்டுமே எண்ண வேண்டியிருந்தது.

இப்போது அதையும் தாண்டி கதை செல்கிறது. அதாவது அங்கே யாழ் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க இழுவளைகளுடன் கூடிய படகுகளை அனுப்பியது அந்த படகுகளின் முதலாளி தி.மு.க.எம்.பி. டி.ஆர்.பாலு என்று தெரிய வந்துள்ளது.இது பயங்கர அதிர்ச்சி செய்தியாகும்..ஏன் என்றால் தற்செயலாகவோ, அல்லது இயற்கையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாகவோ எழுந்த ஒரு தகராறை சிங்கள அரசும், அவர்களின் அடிவருடி அமைச்சரான டக்ளசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் உள்ள பகையாக ஆக்க பார்க்கிறார்கள் என்பதே நமது புரிதலாக இருந்த நேரத்தில், அந்த நாடகத்தில் தி.மு.க.தலைமையின் விசவாச எம்/பி உள்ளே நுழைந்து குட்டையை குழப்பியுள்ளார் என்பது பெரும் அத்ர்ச்சிதானே?

இந்த நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று இப்போது தெரிந்துவிட்டது. அதுமாத்திரம் இன்றி இந்த நாடகத்தில் இந்திய அரசும், தமிழக அரசியல்வாதிகளும் ஈடுபட்டிருப்பதும் இப்போது வெளியே வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை கவலைப்படாமல் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இப்போது மட்டும் ஏன் தெருவுக்கு வந்து போராட தன் மகள் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை இறக்கிவிட்டார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போது அதற்கும் பதில் கிடைத்துவுட்டது. அவரே எழுதி, அவரே நடித்த நாடகத்தில் கதாப்பாத்திரங்களாக பாலுவும், கனிமொழியும், நடித்திருக்கிறார்கள் என்பதும், அந்த தீவிலிருந்து அந்த நாடகத்தில் நடித்தவர் டக்லஸ் என்ற இலங்கை அமைச்சர் என்பதும் புரிந்துவிட்டது.

ராஜபக்சே என்ற அரச தலைவரின் பதவியை காப்பாற்ற டக்லஸ் என்ற அவரது நண்பரும், கருணாநிதி என்ற இன்னொரு நண்பரும் ஏற்பாடு செய்த நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. என்னதான் ராஜபக்சேவிடம் பல வெகுமதிகளை பெற்றாலும், டக்ளசும், கருணாநிதியும் அப்படி தங்களை இழந்து அல்லது தாங்கள் அவமானப்பட்டு நண்பர் ராஜபக்செவிற்காக இத்தகைய இழி செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இருவருமே அரசியலில் பழத்தை தின்று கோட்டையை போட்டவர்கள்.தங்களுக்கு லாபம் இல்லாமல், தங்களின் நலன் முதன்மையாக இல்லாமல் இந்த இருவருமே எந்த தொழிலிலும், அல்லது நாடகத்திலும் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கும் போது டக்ளசுக்கு இதில் என்ன பலன்? அவர் மீது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள பிடி வாரண்டு ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதியின் தயவு வேண்டும். அதற்காக அவர் கருணாவின் எந்த நாடகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்பது புரிகிறது.


அப்படியானால் தமிழக முதல்வர்தான் நாடகத்தின் கதை-வசன கர்த்தாவா? எதற்க்காக அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் கருணா என்ற முதல்வர் விளையாட வேண்டும்? சமீபத்தில் தமிழக கரையோரம் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், அதை ஒட்டி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் கூடிவருவதும் முதல்வர் கருணாவிற்கு தெரியவந்தது. அதற்கு என்ன வழி என்று டில்லியை அவர் கேட்டால் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு போல, கடலிலே எல்லையை கடக்க கூடாது என்று மட்டுமே கூறிவருகின்றனர். கடலிலே எல்லை கிடையாது என்பதும், குறிப்பாக மீன்வர்களுக்கு கடலில் மீன் பிடிக்க எல்லை கிடையாது என்பதும் பகிரங்கமாக மீனவர்கள் மைப்புகளால் முன்வைக்கப்படுவதும் அந்த உண்மை தெரிந்தால் இந்திய அரசின் வாதம் அம்பலமாகும் என்பதால் அந்த உண்மையை உடைக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில உலவுத்துறைகள் எண்ணின.

அதற்கு அவர்கள் இருநாட்டு மீனவர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்த திட்டமிட்டனர்.ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் இருநாட்டு மீனவர்களும் இணைந்து கடலில் இருநாட்டு மீனவரும் இருநாட்டு எல்லைகளிலும் மீன் பிடிக்க உரிமை உண்டு என்று அறிவித்தனர். இன்றுவரை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களுக்குள் சமாதானமாக போய்விட்டால் இரு நாட்டு அரசுகளுக்கும் தலைமை ஆதிக்கம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த வேறுபாடுகளை பயன்படுத்த அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தமான இழுவளையுடன் யாழ் கரைக்கு வரவேண்டாம் என்பதையே மீற ஒரு திட்டம் போடப்பட்டது. அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலுவின் படகுகள் முதலாளியின் கட்டளையுடன் பயன்படுத்தப்பட்டன என்பதே இப்போது வடக்கு இலங்கையின் பாதிரியார் வெளியிட்டிருக்கும் தகவல். டி.ஆர்.பாலு என்பவர் சிறிய கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடித்து அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்துவருபவர். அந்த மனிதரின் படகுகள் சில நாகப்பட்டினம் பகுதியில் இந்த வேளையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகி உள்ளது.

அதனால்தான் தி.மு.க.தலைமை திடீரென அந்த பிரச்சனையில், பதினாலு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் மக்களை வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்துவந்து, இலங்கை எதிர்ப்பு என்பதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பதும் இப்போது தெரிந்துவிட்டது

Sunday, February 20, 2011

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் மரணம்

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் தெய்வத்திரு பார்வதி அம்மையார்  மரணம்