பக்கங்கள்

Saturday, February 26, 2011

காங்கிரஸின் கோபமும் திமுகவின் தயக்கமும்!

காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை திமுக ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பது அதன் தலைவர்களிடம் பேசும்போது தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஆ. ராசாவின் கைது, சிபிஐ விசாரணை என்று உச்ச நீதிமன்றம் முடுக்கி விட்டிருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து வெளிவருவது திமுகவுக்கு பாதகமாகப் போகக்கூடும் என்கிற நிலையில், காங்கிரûஸப் பகைத்துக் கொள்ளத் திமுக தலைமை தயாராக இல்லை.
காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை திமுக ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பது அதன் தலைவர்களிடம் பேசும்போது தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஆ. ராசாவின் கைது, சிபிஐ விசாரணை என்று உச்ச நீதிமன்றம் முடுக்கி விட்டிருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து வெளிவருவது திமுகவுக்கு பாதகமாகப் போகக்கூடும் என்கிற நிலையில், காங்கிரûஸப் பகைத்துக் கொள்ளத் திமுக தலைமை தயாராக இல்லை.

""ஆரம்பத்தில், "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு அமைச்சர் ஆ. ராசா மட்டுமே பொறுப்பாக இருக்க முடியாது என்றும், இவ்வளவு பெரிய ஊழலைத் தனிமனிதராக ஒருவர் செய்திருக்க முடியாது என்றும் பேசிவந்த முதல்வர் கருணாநிதி, இப்போதெல்லாம் அந்தப் பிரச்னை பற்றிப் பேசுவதையே நிறுத்தி விட்டிருப்பதிலிருந்து, எந்த அளவுக்கு திமுக தலைமை சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்'' என்கிறார் ஒரு மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர்.

தில்லியில் காங்கிரஸ் தலைமையுடன் முதல்வர் நடத்திய சந்திப்பிலேயே கூட்டணி ஆட்சி பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

""மத்திய ஆட்சியில் பங்கு பெற்ற நீங்கள் ஏன் மாநில ஆட்சியிலும் பங்கு தரக்கூடாது?'' என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தேர்தலுக்குப் பிறகு நாம் கூட்டணி ஆட்சி அமைத்துக் கொள்ளலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இப்போதே கூட்டணி ஆட்சி என்று அறிவிக்க வேண்டாம்'' என்று முதல்வர் கேட்டுக்கொண்டதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் இந்த ஒப்புதலின் அடிப்படையில்தான் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்க முற்பட்டிருக்கிறது. 1984-ல் போட்டியிட்டதுபோல 73 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பு. இல்லையென்றால், குறைந்தபட்சம் 1991, 1996 தேர்தல்களில் போட்டியிட்டதுபோல 65 அல்லது 64 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அப்படி போட்டியிடுவதன் மூலம் எப்படியும் திமுகவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ள முடியும் என்பதுதான் காங்கிரஸின் எண்ணம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

திமுகவின் மனநிலையே வேறாக இருக்கிறது. கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது இரண்டு இடதுசாரிக் கட்சிகள்தான். அவர்கள் போட்டியிட்ட 23 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பத்து இடங்களையாவது ஒதுக்கித் தந்தாக வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கை 13 என்று சொன்னால் 10 இடங்களையும், 10 என்று சொன்னால் 13 இடங்களையும் திமுகவும், காங்கிரஸýம் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் திமுகவின் விருப்பம்.

""அவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதைவிட, திமுக குறைந்த இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் குறிக்கோளாக இருக்கும் போலிருக்கிறது. காங்கிரஸார் இன்னும் 1977, 1989-களில் மிதக்கிறார்கள். தனியாக நின்றால் இன்றைக்குக் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றிபெறுவதுகூட சிரமம் என்று அவர்களுக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்'' என்று மூத்த திமுக அமைச்சர் நக்கலாகவும் கேலியாகவும் திருவண்ணாமலையில் நடந்த அமைச்சர் ஏ.வ. வேலு இல்லத் திருமணத்தில் கமெண்ட் அடித்ததாகத் தெரிகிறது.

இதைப்பற்றிக் கேள்விப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், "திமுக மட்டும் பழைய பலத்துடன் இருக்கிறதா என்ன?' என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

பரவலாகவே திமுகவினர் மத்தியில் காங்கிரஸ் மீது சந்தேகமும், தங்களை "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள் என்கிற கோபமும் நிறையவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த சிபிஐ விசாரணை பலரையும் மனதுக்குள் குமுற வைத்திருக்கிறது.

""மதிமுக பிரிந்தபோதுகூட, அதைச் சாக்கிட்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவாலயத்தை எதுவும் செய்யத் துணியவில்லை. இப்போது, திமுகவைக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட மத்திய அரசு அறிவாலயத்துக்குள் சிபிஐயை அனுப்புகிறது என்றால், பிறகு அது என்ன கூட்டணி?'' என்று குமுறுகிறார்கள் திமுகவினர்.

2009-ல் மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, திட்டமிட்டு திமுகவின்மீது சேறு வாரிப் பூசப்படுகிறது என்பது திமுகவின் வாதம். அமைச்சரவை அமைப்பதில் திமுகவை வில்லனாகச் சித்திரித்தது, வேண்டுமென்றே ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்களில் திமுகவையும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகளைப் பரப்பியது, இலாகாக்கள் ஒதுக்குவதில் தேவையில்லாமல் சிக்கல்களை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு திமுகவைப் பலவீனப்படுத்தி வருகிறது என்று குமுறுகிறார்கள் அண்ணா காலத்திய திமுக மூத்த தலைவர்கள்.

""காங்கிரஸ் "மிசா'வின்போது நடத்திய தாக்குதலையும், சர்க்காரியா கமிஷன் அமைத்து எங்களை அவமானப்படுத்தியதையும், 1990-ல் எங்களது ஆட்சியைக் கலைத்ததையும், ராஜீவ் மரணத்துக்கு எங்களைக் காரணமாக்கியதையும் நாங்கள் மறந்துவிட முடியுமா என்ன? இப்போதும் பாருங்கள், கூட்டணிக் கட்சி என்றுகூடப் பார்க்காமல் "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் எங்களை மட்டும் குற்றவாளிகளாக்கித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்'' என்று கொதித்துவிட்டார் திமுகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து இப்போது ஓரங்கட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

""கூட்டணி ஆட்சி என்கிற காங்கிரஸின் கோரிக்கை தற்கொலைக்குச் சமம். தமிழக மக்கள் மத்தியில் கூட்டாட்சியை ஏற்றுக்கொள்வதுபோல, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பதைப் பற்றி நாம் யோசித்துக் கொள்ளலாம். இப்போது, கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்து, வெற்றி பெறுவதுதான் முக்கியம்'' என்று முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது.

""கூட்டணி ஆட்சி என்று நாம் அறிவித்ததுதான் திமுக - காங்கிரஸ் கூட்டணி 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குக் காரணம்'' என்று முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டுவதைக் காங்கிரஸார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

""அன்றைய சூழ்நிலை வேறு, இன்றைய சூழ்நிலை வேறு. 1980-ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்த கோபம் மக்களுக்கு இருந்தது. அதுதான் தேர்தல் முடிவுகளை நிர்ணயித்ததே தவிர, கூட்டணி ஆட்சி அல்ல பிரச்னையாக இருந்த விஷயம்'' என்கிறார்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.

""காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை அதிமுகமீது இருப்பது கோபம், திமுகமீது இருப்பது வெறுப்பு!'' என்று பளிச்சென்று போட்டு உடைத்தார் ஒரு முன்னாள் ஜனதாக் கட்சித் தலைவர். ""ஜெயலலிதா ""ராஜீவ் சிந்திய ரத்தத்தால் நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை'' என்று 1992-ல் கூறியதும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைப் பற்றி அவர் கூறிய கருத்துகளும் காங்கிரஸ் தொண்டர்களைக் கோபப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், அது கோபம்தானே தவிர, வெறுப்பல்ல. ஆனால், திமுகவினர்மீதும், கருணாநிதிமீதும் காங்கிரஸாருக்கு இருப்பது வெறுப்பு. கோபம் மாறும். ஆனால், வெறுப்பு மாறவே மாறாது'' என்றார் அவர்.

காங்கிரûஸ ஆட்சியை விட்டு அகற்றிய கட்சி திமுக என்பதால் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு எப்போதுமே உதயசூரியன் சின்னத்தின்மீது வெறுப்பு இருப்பது ஊரறிந்த உண்மை. பெருந்தலைவர் காமராஜைத் தமிழன் என்றும் பாராமல் திமுக கைவிட்டது என்கிற ஆதங்கம் காங்கிரஸாருக்கு நிறையவே உண்டு. அதேபோல, இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றித் தரக்குறைவாகத் திமுகவினர் விமர்சித்ததும், மதுரையில் அவரைத் தாக்க முற்பட்டதும், ராஜீவ் காந்தியின் கொலையாளிகளுக்குத் திமுக அரசு உதவியது என்கிற கருத்தும், காங்கிரஸார் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை.

பரஸ்பரம் திமுகவினருக்குக் காங்கிரஸ்மீதும், காங்கிரஸ்காரர்களுக்குத் திமுகவினர் மீதும் இருக்கும் வெறுப்பு, தமிழகத் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக்கூடும் என்கிற பயம் திமுக தலைமையை அலட்டத் தொடங்கி இருக்கிறது. அதிக இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதேகூடத் தேர்தலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்கிறார் ஒரு மூத்த திமுக தலைவர்.

""காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறக் கூடாது என்று திமுக தொண்டரும், திமுக கூடுதல் இடங்களைப் பெற்றுவிடக்கூடாது என்று காங்கிரஸாரும் கருத்தில் கொண்டு செயல்படக் கூடும். திமுக தலைமையின் கட்டுப்பாட்டை மீறி எங்கள் தொண்டர்கள் செயல்பட மாட்டார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் நாங்கள் முழுமனதுடன் வாக்களிப்போம். ஆனால், காங்கிரஸ் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, காங்கிரஸ் வாக்காளர்கள். அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸýக்கும், திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் அதிமுக அணிக்கும் வாக்களித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை'', என்றார் அவர்.

கூட்டணி ஆட்சி என்கிற சந்தேகம் ஏற்பட்டாலே அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று பயப்படுகிறது திமுக தலைமை. மேலும், அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவது, திமுக தொண்டர்களை உற்சாகமிழக்க வைத்துவிடும் என்றும், இரண்டு கட்சித் தொண்டர்களும் முழுமனதுடன் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் திமுக தலைமையின் கருத்து.

""கடந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே 129 இடங்களில்தான். அதில் 96 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. இதைவிடக் குறைவான இடங்களில் திமுக எப்படி போட்டியிட முடியும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிடக் கூடுதலாக 5 இடங்களைத் தரத் தயாராக இருக்கிறோம். இடதுசாரிகள் இல்லாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லாமல் போனால் கூட்டணி பலவீனமாகிவிடும் என்பதுகூட தங்களுக்குப் புரியாமல் போனால் எப்படி?'' என்று தங்களது இயலாமையைக் காங்கிரஸின் ஐவர் குழுவுக்குத் திமுக குழு தெரிவித்ததாகக் கூறுகிறார்கள்.

தேமுதிகவும் சேர்ந்துவிட்ட நிலையில் கடந்த தேர்தலைவிட அதிமுக அணி மேலும் பலமடைந்திருக்கிறது. இடதுசாரிகள் இல்லாத நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்தாலுமேகூட, திமுக கூட்டணி, பழைய பலத்துடன்தான் தொடர்கிறதே தவிர, அதன் கூட்டணி பலம் அதிகரிக்கவில்லை. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இழப்பது திமுக அணியை மேலும் பலவீனப்படுத்தும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்தால், காங்கிரஸýக்கு அதிகபட்சம் 53 முதல் 57 இடங்களைத்தான் தர முடியும். காங்கிரஸ் கேட்கும் 65 இடங்களைத் தந்தால், திமுகவின் நிலைதான் என்ன? என்பது திமுக தரப்பின் நியாயமான கேள்வி.

காங்கிரஸின் கோபத்துக்கும் காரணம் இருக்கிறது... திமுகவின் தயக்கத்துக்கும் காரணமிருக்கிறது

நன்றி தினமணி

No comments:

Post a Comment